‘இவன் வேற மாதிரி’ எந்த மாதிரி?

‘இவன் வேற மாதிரி’ எந்த மாதிரி?

செய்திகள் 18-Jul-2013 1:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'கும்கி' வெற்றிப் படத்திற்குப் பிறகு 'திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் 'இவன் வேற மாதிரி'. இந்தப் படத்தை 'எங்கேயும் எப்போதும்' புகழ் எம்.சரவணன் இயக்குகிறார். படம் குறித்து இயக்குனர் எம்.சரவணன் கூறும்போது,

"பொதுவாக ஒருவனை ‘இவன் வேற மாதிரி’ என்று சொல்லும்போது அது எதிர்மறையான கருத்தைத்தான் குறிக்கும். ஆனால், இந்தப் படத்தின் நாயகன் வேற மாதிரி. அதாவது நல்லவன். எங்கேயாவது ஒரு தப்பு நடக்கும்போது அதுபற்றி ஆளாளுக்கு ஒரு கருத்து இருக்கும். இதற்கு காவல்துறைதான் காரணம், அரசுதான் காரணம், அரசியல்வாதிதான் காரணம் என இப்படி கூறப்படும். நமக்கு இதில் என்ன தொடர்பு, பொறுப்பு இருக்கிறது? நம்மால் ஆக வேண்டியது என்ன என்று யாரும் யோசிப்பது இல்லை. அப்படி யோசிப்பவன், செயல்படுபவன்தான் இந்தப் படத்தின் நாயகன்.

இதில் விக்ரம் பிரபுவுடன் நாயகியாக புதுமுகம் சுரபி நடிக்கிறார். வில்லனாக வம்சி, போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த நான்கு முக்கியப் பாத்திரங்களை மையமாக வைத்துதான் கதை நகரும். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் சுரபிக்கு தமிழும் தெரியாது, சினிமா அனுபவமும் கிடையாது. அதனால் அவருக்கு ஒரு மாதம் பயிற்சி அளித்த பிறகுதான் நடிக்க வைத்திருக்கிறோம்.

ழுக்க முழுக்க ஆக்ஷன் லவ் ஸ்டோரியாக உருவாகி வரும் படம் இது. நான் இயக்கிய ’எங்கேயும் எப்போதும்' படத்திற்கு இசை அமைத்த சத்யா தான் இந்தப் படத்திறகும் இசை அமைக்கிறார். ‘திருப்பதி பிரதர்ஸ்’ இயக்குநர் லிங்குசாமியின் நிறுவனம். அதனால் அந்த நிறுவனத்திற்கு படம் இயக்குவது மிகவும் சௌகர்யமாக இருக்கிறது’’ என்றார் இயக்குனர் எம்.சரவணன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;