தனுஷ் – செல்வராகவன் மறுப்பு!

தனுஷ் – செல்வராகவன் மறுப்பு!

செய்திகள் 18-Jul-2013 11:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் தனுஷ் நடித்துள்ள ‘மரியான்’ படம் நாளை ரிலீஸாக இருக்கிறது. இதன் தொடர்பான வேலைகளில் பிசியாக இருக்கும் தனுஷ், சமீபத்தில் ஒரு வார இதழில் தான் அளித்தது மாதிரி வந்த பேட்டியில் உண்மை இல்லை என்றும், அந்த பத்திரிகைக்கு நான் பேட்டி அளிக்கவில்லை என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோலவே அதே இதழில் தனுஷின் அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் குறித்து வந்த ஒரு சில செய்திகளுக்கு செல்வராகவனும் மறுப்பு தெரிவித்து டுவிட்டரில், ‘’அந்த வார இதழில் நான் கூறியதுபோல் வந்த செய்திகளில் உண்மை இல்லை. நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன்.

என்னுடைய படைப்புகளை விமர்சிக்கவோ, வரவேற்கவோ ரசிகர்களுக்கு முழு உரிமை உண்டு. கடந்த 14 வருடங்களாக ஒரு படைப்பாளியாக சினிமா உலகில் இருக்கும் என்னுடைய எதிர்காலத்தை ரசிகர்கள்தான் தீர்மானிப்பார்கள்’’ என்று கூறியிருப்பதோடு, ‘’அடுத்து தெலுங்கு, ஹிந்தியில் ஒரு சில படங்களை இயக்க இருக்கிறேன்’’ என்றும் அந்த பத்திரிகைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;