எட்டு திக்கும் பட்டத்து யானை!

எட்டு திக்கும் பட்டத்து யானை!

செய்திகள் 18-Jul-2013 10:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘பட்டத்து யானை’ வருகிற 26-ஆம் தேதி எட்டு திக்கும் 850க்கும் மேற்பட்ட பிரதிகளுடன் ரிலீஸாகவிருக்கிறது.

விஷாலுடன் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் ஹீரோயினாக நடித்து அறிமுகமாகும் இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கியிருக்கிறார். விஷால் நடித்து சமீபத்தில் வெளியாகிய ஒரு சில படங்கள எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், ‘பட்டத்து யானை’ மூலம் பெரிய ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிரடியான திரைக்கதை அமைப்பில் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார்ள்.

படத்தின் பாடல்கள், ட்ரைலர் ஆகியவை வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்க, ‘பட்டத்து யானை’யை கொண்டாட காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த படத்தின் சென்னை விநியோக உரிமையை விஷால் வாங்கியிருப்பதோடு, ‘தீரடு’ என்ற பெயரில் தெலுங்கிலும் விஷாலே வெளியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;