ஆஞ்சநேயப் பக்தன் உதயநிதி!

ஆஞ்சநேயப் பக்தன் உதயநிதி!

செய்திகள் 18-Jul-2013 10:11 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், தற்போது ‘சுந்தரபாண்டியன்’ இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்படத்தில் கதிர்வேலனாக நடிக்கும் உதயநிதி சிறுவயதிலிருந்தே, தீவிர ஆஞ்சநேய பக்தனாக வருகிறாராம். இதனால், பெண்களை நிமிர்ந்து பார்க்காத இவர், ஒரு கட்டத்தில் நயன்தாராவை யதேச்சையாகப் பார்க்கிறாராம். பார்த்த முதல் பார்வையிலேயே அவரிடம் மனதைப் பறிகொடுக்கும் உதயநிதி, அதன்பிறகு படும் அவஸ்தைகளை காமெடி, சென்டிமென்ட் கலந்து சொல்லியிருக்கிறார்களாம் இப்படத்தில்.

முதல் படத்தைவிட இந்தப் படத்தில் நடிப்பு, டானஸ், ஃபைட் என அத்தனை ஏரியாக்களிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறாராம் நாயகன் உதயநிதி. ‘ஓகே ஓகே’ படத்தைப்போல இப்படத்திலும் சந்தானம் & உதயநிதியின் காமெடி பெரிதாகப் பேசப்படும் என்கிறார்கள். ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;