பாலிவுட்டின் ‘சென்னை’ மோகம்!

பாலிவுட்டின் ‘சென்னை’ மோகம்!

செய்திகள் 17-Jul-2013 4:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய சினிமாவிலேயே இப்போது தமிழ் சினிமாதான் எல்லா விஷயங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது என்று சொல்லலாம். அதனை மெய்ப்பிக்கும் வகையில் சென்னையைப் பின்னணியாக வைத்து ஒரே நேரத்தில் இரண்டு ஹிந்தி படங்கள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று ‘மசில்மேன்’ ஷாருக்கான் ஹீரோவாக நடித்து தயாரித்திருக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. அடுத்த மாதம் 9ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனேஆகியருடன், நம்ம ஊர் சத்யராஜ், ப்ரியாமணி, புவிஷா என பலரும் நடித்திருக்கும் இப்படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியிருக்கிறார்.

மும்பையில் இருந்து தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரத்துக்கு வரும் ராஹுல் என்ற இளைஞனை பற்றி சித்தரிக்கும் இந்தப் படத்தில் நிறைய தமிழ் கேரக்டர்களும், தமிழ் வசனங்களும் இடம் பெற்றிருப்பது சிறப்பு என்றால், சென்னையை மையப்படுத்தி பாலிவுட்டின் இன்னொரு ‘மசில்மேன்’ ஆன ஜான் ஆப்ரகாம் தயாரித்து, நடிக்கும் ‘மதராஸ் கஃபே’ என்ற படத்திலும் பல சிறப்புக்கள் உள்ளன. இதில் இந்தியன் இன்டலிஜென்ட் அதிகாரி ராஹுல் என்ற பாத்திரத்தில் ஜான் ஆப்ரகாம் நடிக்க, அவருக்கு ஜோடியாக நர்கீஸ் ஃபக்ரியா நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை ஷுஜித சர்கார் இயக்கியிருக்க, இலங்கை, தமிழ்நாடு, இந்தியா சம்பந்தமான அரசியல் விஷயங்கள் அடங்கிய ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை ஆகஸ்ட் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறர் ஜான் ஆப்ரகாம்.

தமிழகத்தை குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டு படங்களில், எந்தப் படம் மக்களை கவர்ந்து வசூலில் கல்லா கட்டும் என்பது அடுத்த மாதம் தெரிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;