பொங்கலுக்கு வரும் ‘தல’ படம்!

பொங்கலுக்கு வரும் ‘தல’ படம்!

செய்திகள் 17-Jul-2013 3:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு வேலைகள் 50 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. சிவாவின் சரியான திட்டமிடலாலும், அஜித்தின் முழு ஒத்துழைப்பாலும் வேகவேகமாக வளர்ந்து வரும் இப்படம் நிச்சயம் 2014ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என தெரிவித்திருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்களான ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’ வெங்கடராம ரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்து சென்ற அஜித்-தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர், அங்கே தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இரண்டு பாடல்களின் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டுத் திரும்பியுள்ளார்கள். இந்தப் பாடல்களுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைக்க அஜித்தும் தமன்னாவும் அற்புதமாக ஆடியிருக்கிறார்களாம்.

சந்தானம், பாலா, விதார்த் , முனீஸ், சுஹைல், 'நாடோடிகள்' அபிநயா, மனோசித்ரா, 'எதிர் நீச்சல்' சூஸா குமார், ரமேஷ் கண்ணா, இளவரசு, அப்பு குட்டி, பிரதீப் ராவத், கிரேன் மனோகர், வித்யு லேகா ராமன், தேவதர்ஷினி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடிக்க உள்ள இந்த பிரம்மாண்ட படத்தின் ஒளிப்பதிவை வெற்றியும், படத்தொகுப்பை காசி விஸ்வநாதனும், சண்டைப் பயிற்சியை செல்வாவும், கலை இயக்கத்தை மிலனும் கவனிக்கிறார்கள். முழுக்க முழுக்க ஜனரஞ்சகமாக தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் அஜீத்தின் உடை அமைப்பும், கதாபாத்திர அமைப்பும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விசிறி - டிரைலர்


;