அப்பாவுக்கு பொண்ணு, மகனுக்கு லவ்வர்! - நஸ்ரியாவின் வளர்ச்சி

அப்பாவுக்கு பொண்ணு, மகனுக்கு லவ்வர்! - நஸ்ரியாவின் வளர்ச்சி

செய்திகள் 17-Jul-2013 3:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நேரம்’ நஸ்ரியாவுக்கு இப்போது நேரம் ரொம்பவும் நல்லா இருக்கிறது. நஸ்ரியா குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமான படம் ‘பளுங்கு’. இந்த மலையாள படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடிக்க, நஸ்ரியா அவரது மகளாக நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘பிரமாணி’ என்ற படத்திலும் மம்முட்டியின் மகளாக நடித்ததோடு மற்றும் சில படங்களில் நடித்த நஸ்ரியா, ஹீரோயினாக நடித்து அறிமுகமான படம் ‘நேரம்’. இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் வெளியாகி வெற்றிபெற்றது.

இதனைத் தொடர்ந்து தமிழிலும், மலையாளத்திலும் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நஸ்ரியா இப்போது மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்கும் ‘சலால மொபைல்ஸ்’ என்ற மலையாள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பிரபல விளம்பர இயக்குனர் சரத் ஏ.ஹரிதாஸ் முதன் முதலாக இயக்கும் படம் இது. மம்முட்டியின் மகளாக நடித்த நஸ்ரியா இப்போது அவரது மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, காதலியாக நடிப்பதுதான் தற்போதைய மல்லுவுட்டின் ஹாட் டாபிக்!

அடுத்து, நஸ்ரியா மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;