தீவிர சிகிச்சை பிரிவில் வாலி!

தீவிர சிகிச்சை பிரிவில் வாலி!

செய்திகள் 17-Jul-2013 12:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கவிஞர் வாலி (வயது 81) உடல்நிலை சரியில்லாமல் கடந்த நாற்பது நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் தொற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் அவருக்கு தீவிரசிகிச்சை அளித்து வந்தார்கள். அதன்பின்பு உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார் கவிஞர் வாலி. ஆனால், மீண்டும் அவரது உடல்நிலை மோசமாக, மறுபடியும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். கடந்த முப்பது நாட்களுக்கும் மேலாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.

வாலியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மருத்துவமனைக்கு வந்தபோது, ‘‘விஸ்வரூபம் 2 படத்திற்கு ஒரு பாடல் எழுதணும். நாங்க வெயிட் பண்ணிகிட்டு இருக்கோம். அவரை சீக்கிரம் அனுப்பி வைங்க’’ என்று வாலியின் காதில் படும்படி மருத்துவரிடம் கூறிவிட்டுச் சென்றார். ஏ.ஆர்.ரஹ்மானும் மருத்துவமனைக்கு வந்து வாலியை நேரில் சந்தித்துச் சென்றார்.

இந்நிலையில், நேற்றிரவு கவிஞர் வாலியின் உடல்நிலை மேலும் மோசமானது. உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. வாலியின் உடல்நிலை பற்றி அறிந்த திரையுலகம் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

‘வாலிபக் கவிஞனே’ சீக்கிரம் எழுந்து வா... உன் கவிதைகளுக்காக காத்திருக்கிறது தமிழ்சினிமா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;