ஹிந்தி படத்தில் ‘ரோஜா’ ஹீரோ!

ஹிந்தி படத்தில் ‘ரோஜா’ ஹீரோ!

செய்திகள் 17-Jul-2013 12:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் நடித்த அரவிந்தசாமி, அதற்கு பிறகு வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாத நிலையில், இப்போது அவருக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. விக்ரம், ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘டேவிட்’ படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் ஹிந்தியில் இயக்க இருக்கும் படத்தில் தான் அரவிந்தசாமி நடிக்க இருக்கிறார்.

அரவிந்த சாமி ஏற்கெனவே ‘சாத் ரங் கே சப்னே’, ‘ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும், அப்படங்கள் அரவிந்தசாமிக்கு சொல்லும்படியான வெற்றியை தரவில்லை. அதன் பிறகு தமிழில் பல படங்க்ளில் நடித்த அரவிந்த சாமி, ஒரு பெரிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ரீ-என்ட்ரி ஆகிறார். இயக்குனர் பிஜாய் நம்பியார் இப்போது தமிழில் வெளியான பீட்சா படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்து இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் அரவிந்த சாமி நடிக்கும் படத்தை துவங்கவுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் புதிய டீசர் - வீடியோ


;