ஸ்வேதா மேனன் படம்… யூ-ட்யூபில் சாதனை!

ஸ்வேதா மேனன் படம்…  யூ-ட்யூபில் சாதனை!

செய்திகள் 17-Jul-2013 11:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல மலையாள இயக்குனர் ப்ளஸ்ஸி இயக்கியிருக்கும் படம் ‘களிமண்’. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஏற்படும் இயற்கையான விஷயங்களை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஸ்வேதா மேனன் கதையின் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்க, அவரது கணவராக பிஜு மேனன் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்காக, நிஜமாகவே கர்ப்பிணியாக இருந்த ஸ்வேதா மேனனின் குழந்தை பேற்றை மும்பையிலுள்ள ஒரு மருத்துவமனையில் நேரடியாக படம் பிடித்து, இந்த விஷயம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது பழைய செய்தி. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் இப்படத்தின் ஒரு பாடலை யூ-ட்யூபில் வெளியிட்டுள்ளனர். ‘’லாலி…லாலி…’ என துவங்கும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடல் வெளியான முதல் நாளன்றே 2,35,,000 பேர் பார்த்துள்ளனர்.

தொடர்ந்தும் இந்த பாடலை விறுவிறு என நிறைய பேர் பார்த்து வருகிற நிலையில் இதுவரை 5,17,873 பேர் பார்த்து சாதனை படைத்திருக்கிறது. மல்லுவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் எல்ல மொழிக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;