இந்தியாவிலேயே முதல் முறையாக 8 பேக்!

இந்தியாவிலேயே முதல் முறையாக 8 பேக்!

செய்திகள் 17-Jul-2013 10:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆஸ்மி ஃபிலிம்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பாக சிராஜுதீன் தயாரிக்க, ‘சூப்பர் ஸ்டார் சினிமாஸ்’ வழங்கும் படம் ‘மின்னல்’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் ஆதவன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்க அங்கனா, நவ்யா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படம் குறித்து இயக்குனர் சிராஜ் கூறும்போது, ‘’ மின்னல்’ பக்கா கமர்ஷியல் படம்தான்.

இதில் ஆதவன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாம் இதுவரை படங்களில் சிக்ஸ் பேக் கட்டுடன்தான் ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்காக தனது உடம்பை 8 பேக் கட்டுடல் ஆக்கி நடிக்க இருக்கிறார் ஆதவன். இந்தியாவிலேயே ஒரு புதுமுகம், தான் நடித்து அறிமுகமாகும் படத்திற்காக 8 பேக் உடற்கட்டுடன் தோன்றுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். இதற்கான பயிற்சியின்போது கடைசி ஐந்து நாட்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் பயிற்சி செய்து 8 பேக் உடற்கட்டை கொண்டு வந்திருக்கிறார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக்கெட் - டிரைலர்


;