இசை திருட்டு… ஜி.வி.பிரகாஷ் குற்றச்சாட்டு!

இசை திருட்டு… ஜி.வி.பிரகாஷ் குற்றச்சாட்டு!

செய்திகள் 17-Jul-2013 10:21 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சில ஆடியோ கம்பெனிகள் ராயல்டி விவகாரத்தில் இசை அமைப்பாளர்களை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளார் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இது சம்பந்தமாக அவர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ‘’சில ஆடியோ நிறுவனங்கள் இசை அமைப்பாளர்களிடமிருந்தும், பாடல் ஆசிரியர்களிடமிருந்தும் ராயல்டியை திருடுகின்றனர்.

இந்த திருட்டு குறித்து மூத்த இசை அமைப்பாளர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இதற்கு ஒரு முடிவு காணவேண்டும். இசை அமைப்பாளர் யூனியனும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ராயல்டி என்பது ஒரு படைப்பாளையின் அடிப்படை உரிமை. அதை திருடுவது நாகரீகமற்ற செயல் மட்டுமல்ல, தண்டனைக்குரிய குற்றமுமாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;