‘மரியான்’ முன்னோட்டம்!

‘மரியான்’ முன்னோட்டம்!

கட்டுரை 16-Jul-2013 4:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ரான்ஜனா’ படம் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்து, அங்கும் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்ட தனுஷின் நடிப்பில் வருகிற 19-ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் படம் ‘மரியான்’. ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி அமைத்து, ’வந்தே மாதரம்’, ‘ஜன கண மன’ போன்ற ஆல்பங்களை தயாரித்து, இயக்கியவரும், ‘ஹரி ஓம்’ என்ற படத்தை டைரக்ட் செய்தவருமான பரத்பாலா முதன் முதலாக தமிழில் இயக்கியிருக்கும் படம் ‘மரியான்’.

தனுஷ், பார்வதி மேனன் ஜோடி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் மார்க் கோனிக்ஸின் ஒளிப்பதிவு, ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரிப்பு என பல ‘ஸ்பெஷல்கள்’ நிறைந்த படம் இது. தனுஷின் ‘ரான்ஜனா’ படமும், இந்தப் படமும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் படம் பிடிக்கப்பட்டு, ஒரே நேரத்தில் ரிலீஸாகவும் ரெடியான படங்கள்! ஆனால் ஒரு சில காரணங்களால் மரியானை முந்திக்கொண்டு ‘ரான்ஜனா’ வெளியாகி வெற்றி பெற்றதால் ‘மரியானு’க்கு கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் இருந்த எதிர்பார்ப்பு இப்போது ‘டபுள்’ ஆகி விட்டது.

இதற்கு இன்னொரு காரணம், மரியானை படைத்திருக்கும் பரத்பாலா தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும், நம்மளை விட பாலிவுட் காரர்களுக்கு அதிகம் பரிச்சயமானவர்! இந்நிலையில ‘மரியான்’ படத்தில் தனுஷை நடிக்க வைத்தது குறித்து பரத்பாலா,

‘‘மரியான்’ படத்தோட கதையை அவுட்லைனாக உருவாக்கி வைத்திருந்த நேரம் அது. அப்போது நான் நேஷனல் அவார்டு கமிட்டியில் ஒரு மெம்பராக இருந்தேன். அப்போது விருதுக்குரிய படங்களை தேர்வு செய்யும்போது, தனுஷ் நடித்த ‘ஆடுகள்ம்’ படத்தை பார்த்தபோது, அதில் தனுஷ் என்னை ரொம்பவும் கவர்ந்தார். நான் அப்போதே தீர்மானித்து விட்டேன் இவ ர்தான் என்னோட ‘மரியான்’ என்று! அதன் பிறகு தனுஷிடம் கதையின் அவுட்லைனைச் சொல்ல, அவரும் கதையில் ரொமபவும் இம்ப்ரஸ் ஆனார். இப்போது அந்த மரியானை தனுஷை தவிர்த்து பார்த்தால் யாரும் என மனதுக்கு புலப்படமாட்டார்’’என்று ‘மரியான்’ தனுஷ் பற்றி பெருமிதத்துடன் கூறுகிறார்.

மீனவர் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞனை பற்றிய இந்தக் கதையின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர கிராமங்களில் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தில் கிட்டத்தட்ட அறுபது அடி ஆழ கடல் நீருக்கடியில் ஒரு சில காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டிருக்கிறது. நிஜத்தில் நீச்சல் தெரியாத தனுஷ் இந்த காட்சிகளில் நடித்தபோது ரொம்பவும் கஷ்டப்பட்டாராம். ஒளிப்பதிவாளர் மார்க் கோனிக்ஸ் ஏற்கெனவே பல ஆங்கில படங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர் என்பதோடு, டைவிங்கிலும் எக்ஸ்பர்ட்டாம்.

அதனால் அவரது ஒத்துழைப்போடு, தனுஷ் கதைக்கு என்ன தேவையோ அதை உணர்ந்து நூறுசதவிகித ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளாராம். இது மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஆசாமிகளால் கடத்தப்படும் மரியான் அந்த ஆசாமிகளுடன் மோதும் சண்டை காட்சிகள் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத ஸ்டைலில் படமாக்கப்பட்டுள்ளதாம். படத்தில் ஒரு சிறுத்தையும் முக்கிய பாத்திரமாக வர, அந்த சிறுத்தையும் தனுஷிடம் நிறைய வேலை வாங்கியிருக்கிறதாம். இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பு, மலையாளத்தின் பிரபல நடிகரும், தேசிய விருது பெற்றவருமான சலீம் குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் தனுஷின் கேரியரில் ’மரியான்’ எந்த இடத்தைப் பிடிக்கும் என்பது ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;