‘ஐ’ தாமதமாவது ஏன்? - ஷங்கர் விளக்கம்

‘ஐ’ தாமதமாவது ஏன்? - ஷங்கர் விளக்கம்

செய்திகள் 16-Jul-2013 1:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் தற்போது வரிசையாக பல பிரம்மாண்டமான படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் சீஸன் இது. ஒரு காலத்தில் பாலிவுட் படங்களையும், ஹாலிவுட் படங்களையும் ஒப்பிட்டு பேசி வந்த காலம் போய், இப்பொது பாலிவுட்டுக்கும், ஹாலிவுட்டுக்கும் சவால் விடும் வகையில் தமிழ் படங்களும் உருவாகி, ‘நம்மவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல’ என்று நிரூபித்து வரும் காலகட்டம் இது.

கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’, செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’, ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ என பல பிரம்மாண்ட படங்கள் வரிசையாக வரவிருக்கிற நிலையில், தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தை புகுத்தி, தனக்கான ஒரு ரூட்டை அமைத்துக் கொண்டு படங்களை இயக்கி வரும் ஷங்கரின் அடுத்த பிரம்மாணட படைப்பு ‘ஐ’. இந்த படம் துவங்கப்பட்ட காலத்திலிருந்து படம் சம்பந்தமான பல தகவல்கள் வந்துகொண்டிருக்க, இப்போது இயக்குனர் ஷங்கரே தனது இணையதளத்தில் ‘ஐ’ படம் பற்றி ஒரு சில தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளார்.

‘‘ ஐ படத்தில் விக்ரம் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார். ‘அந்நியன்’ படத்திற்கு பிறகு நானும், விகரமும் மீண்டும் இணைந்து உருவாக்கும் படம். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. படத்தில் விக்ரமின் உடல் அமைப்பு மாற்றங்கள் மற்றும் அதற்கான மேக்-அப் போன்ற விஷயங்களுக்காகவே நிறைய நாட்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

ஹாலிவுட் கலைஞர்கள் ஷான் ஃபுட் மற்றும் டேவினா லாமவுன்ட் ஆகியோர் விக்ரமுக்கு செய்த மேக்-அப்கள் கண்களுக்கு விருந்து படைத்தன. விக்ரம் மீண்டும் ஒரு முறை தன்னை மகத்தான ஒரு நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். சென்ற மாதம் பெங்களூர், மைசூர், சென்னை என பல இடங்களிலாக நடந்த படப்பிடிப்புடன், எழுபத்தைந்து சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இந்தப் படத்திற்காக கடந்த மே மாதம் நியூசிலாந்திலுள்ள வீட்டா (WETA) வொர்க் ஷாப்பையும், அதன் இணை நிறுவனர் ரிச்சர்ட் டெய்லர் உள்பட பல கலைஞர்களையும், தொழில் நுட்ப வல்லுநர்களையும் சந்தித்தேன். சிற்பம் உள்ளிட்ட கலைகளில் ஈடுபட்டுவரும் ரிச்சர்ட் டெய்லர் மற்றும் அவரது கலைஞர்களின் கலைத் திறமைகளைக் கண்டு வியந்து போனேன.

ரிச்சர்ட் டெய்லர் பணத்தைவிட, படைப்பாற்றலுக்கு முக்கியத்துவம் தருபவர் என்பது என்னை மிகவும் கவர்ந்தது. இந்த ‘வீட்டா’ பங்கு வகித்த சமீபத்திய படங்களின் விஷுவல்கள், ஒப்பனை, கலைப் பொருட்கள் முதலியவற்றைக் கண்டு நான் ரொம்பவும் ஆச்சர்யப்பட்டேன். நான் இயக்கிய ‘எந்திரன்’ படத்துக்காக அமெரிக்காவின் ஸ்டான் வாட்ஸன் ஸ்டுடியோவுக்குச் சென்றபோது ஏற்பட்ட அனுபவம் ‘வீட்டா’வுக்குச் சென்றபோதும் ஏற்பட்டது.’’ என்று குறிப்பிட்டிருக்கிறர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;