மீனுடன் மோதவிருக்கும் யானை!

மீனுடன் மோதவிருக்கும் யானை!

செய்திகள் 15-Jul-2013 5:39 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘பட்டத்து யானை’. விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ள இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கியிருக்கிறார். விஷால் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த ‘சமர்’ எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ’பட்டத்து யானை’ பெரிய எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில், இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு.

அதாவது நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்து அறிமுகமாகும் படம் என்பது! . இந்நிலையில் இந்த படத்தை வருகிற 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதே தினம் ‘கற்றது தமிழ்’ ராம் ஹீரோவாக நடித்து, இயக்கியுள்ள ‘தங்க மீன்கள்’ படமும் ரிலீஸாக இருக்கிறது. ஒரே நாளில் யானையும், மீன்களும் வெளியாகி மோத இருப்பது கோலிவுட்டில் ஒரு எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;