காமெடியில் கலக்க இருக்கும் மௌன குரு!

காமெடியில் கலக்க இருக்கும் மௌன குரு!

செய்திகள் 15-Jul-2013 2:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வம்சம்’, ‘உதயன்’, ‘மௌனகுரு’ போன்ற படங்களை தொடர்ந்து அருள்நிதி ‘தகராறு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அருள்நிதிக்கு பூர்ணா ஜோடியாக நடிக்க, கணேஷ் வினாயக் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அருள்நிதி தனது சொந்த நிறுவனமான ‘மேக்னா மூவிஸ்’ தயாரிக்க, சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்றும், இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க, பிந்து மாதவி ஒப்பந்தமாகியிருக்கிறார் என்றும் நமது இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம் அல்லவா?

இப்போது ‘தகராறு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கும் நிலையில், அருள்நிதி தனது அடுத்த படத்தின் வேலைகளில் பிசியாகி விட்டார். விரைவில் படப்பிடிப்பை துவங்கவிருக்கும் இப்படத்திற்கு ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ என்று பெயர் வைத்துள்ளனர். ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’, ‘அறை எண் 305-ல் கடவுள்’, ‘இரும்புகோட்டை முரட்டு சிங்கம்’ ஆகிய படங்களை தொடர்ந்து சிம்புதேவன் இயக்கவிருக்கும் இப்படமும் காமெடியை பின்னணியாக கொண்டதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆறாது சினம் - டிரைலர்


;