விஞ்ஞானியாகும் சூப்பர் ஸ்டார்!

விஞ்ஞானியாகும் சூப்பர் ஸ்டார்!

செய்திகள் 15-Jul-2013 2:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரித்த, ‘அரண்’ படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், தற்போது அதே ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடன் கை கோர்த்து நடித்து வருகிறார். கதையில் முக்கியத்துவமுள்ள கேரக்டர் என்றால் எந்த நடிகருடனும், எந்த மொழியிலும் நடிக்கத் தயாராக இருக்கும் மோகன் லால், ‘மைத்ரி’ என்ற கன்னட படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில், கன்னடத்தின் மாஸ் ஹீரோ புனித்ராஜ் குமார் கதாநாயகனாக - டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிக்க, மோகன் லால் பிரபல விஞ்ஞானி ஒருவராக நடிக்கிறார். கிரிராஜ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக வேதா சாஸ்திரி நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;