மிஸ் இந்திய அழகியை தேர்வு செய்த பிரபுதேவா!

மிஸ் இந்திய அழகியை தேர்வு செய்த பிரபுதேவா!

செய்திகள் 15-Jul-2013 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபுதேவா இயக்கத்தில் விரைவில் ரிலீசாகவுள்ள ஹிந்திப் படம், 'ராமய்யா வஸ்தாவய்யா'. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஷாஹித் கபூர், சோனாக்‌ஷி சின்ஹா ஜோடியாக நடிக்க, ‘ராம்போ ராஜ்குமார்’. என்ற ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார் பிரபு தேவா. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வர, அடுத்து அஜய் தேவகன் ஹீரோவாக நடிக்கும் ஒரு ஹிந்தி படத்தையும் இயக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, யாமி கௌதம் என இரண்டு ஹீரோயின்கள் முடிவாகிவிட்ட நிலையில், மூன்றாவது நாயகியாக நடிப்பதற்கு ஒரு சில நடிகைகள் பிரபு தேவாவை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், அவர்களுக்கெல்லம் அதிர்ச்சி கொடுத்தவாறு, ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ அழகி மானஸ்வியை தேர்வு செய்திருக்கிறார் பிரபுதேவா.

இவர் 2010-ல் ’ஃபெமினா மிஸ் இந்தியா’வாக தேர்வு பெற்றதோடு, அதே வருடம் நடந்த ’மிஸ் வேர்ல்டு’ அழகு போட்டியிலும் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி - சல்மார் வீடியோ சாங்


;