இயக்குனராகும் பிரபல நடிகை!

இயக்குனராகும் பிரபல நடிகை!

செய்திகள் 15-Jul-2013 11:11 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'அழகிய தீயே', 'மாயக்கண்ணாடி' போன்ற பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நவ்யா நாயர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்தவர் தற்போது மீண்டும் என்ட்ரியாகி ஒரு பிரபல மலையாள சேனலின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நடிகை, நாட்டிய தாரகை, தொகுப்பாளினி என பல முகங்களைக் கொண்ட நவ்யாவுக்கு இன்னொரு முகமும் உண்டு என்பதை அவர் சமீபத்தில் நிரூபித்திருக்கிறார்.

தான் நடிக்க வந்த காலத்திலிருந்து இது வரையிலான காலகட்டத்தில் நடந்த நவரச நிகழ்வுகளை தொகுத்து ‘நவ்யா நவரசங்கள்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி, தான் ஒரு எழுத்தாளரும் கூட என்பதை நிரூபித்துள்ளார். இந்த புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்ட நவ்யா, அடுத்து, ‘யக்‌ஷி’ என்ற பெயரில் ஒரு நாவலை எழுதி வருவதோடு, சினிமாவுக்கான ஒரு திரைக்கதை எழுதுவதிலும், அதை படமாக்குவதிலும் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;