நயன்தாரா படத்தில் ப்ரியாமணி!

நயன்தாரா படத்தில் ப்ரியாமணி!

செய்திகள் 15-Jul-2013 11:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘முத்தழகு’ ப்ரியாமணி இப்போது குத்தாட்ட நாயகி ஆகிவிட்டார் போலும்! அடுத்த மாதம் 8-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ஹிந்தி படத்தில் கலக்கலான ஒரு ஆட்டம் போட்டிருப்பவர், தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘அனாமிகா’ படத்திலும் ஒரு சூப்பர் குத்தாட்டம் போடவிருக்கிறார்.

இந்த படம் வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்து வசூலில் கல்லா கட்டிய ‘கஹானி’ ஹிந்தி படத்தின் ரீ-மேக் என்பதும், வித்யா பாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்பதும் ஊரறிந்த செய்தி! சேகர் கமுலா இயக்கும் இப்படத்தில் வைபவ், பசுபதி மற்றும் பலர் நடிக்க, படம் ஹைதராபாத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.

நயன்தாரா – ப்ரியாமணி…. டபுள் ட்ரீட்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டீசர்


;