இதுவும் ஒரு வகை விளம்பர யுக்திதான்!

இதுவும் ஒரு வகை விளம்பர யுக்திதான்!

செய்திகள் 15-Jul-2013 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு படத்தை இயக்கி தயாரித்து, உருவாக்குவதை விட அதற்கு பொருத்தமான ஒரு தலைப்பை வைப்பது கடினமான வேலை போலும்! இதற்கு உதாரணம், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் அவரது 53-ஆவது படம். அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி என பலர் நடித்துள்ள இப்படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்ப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த டத்திற்கு ‘வலை’ என்று பெயர் வைத்துள்ளதாக ஒரு சில தினங்களாக தகவல்கள் வந்துகொண்டிருந்த நிலையில், படத்தின் தலைப்பை விரைவில் அறிவிக்கப் போகிறார் விஷ்ணுவர்த்தன் என்று சமீபத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால் இன்னும் படத்திற்கு தலைப்பு வைத்த பாடும் இல்லை, எந்த அறிவிப்பும் வந்த பாடில்லை! இந்நிலையில் இப்போது படத்திற்கு, ‘பறவை’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வந்தவண்ணமுள்ளன.

ஆனால் இதுவும் ஒரு வதந்தி என்கின்றனர் ஒரு சிலர். இன்னொரு தரப்பினரோ, படத்தின் தலைப்பு விஷயத்தை வைத்து வேடிக்கை காட்டி வரும் இதுவும் ஒரு வகையான பட விளம்பர் யுக்தி தான் என்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;