ரஜினி இயக்குனர் மரணம்!

ரஜினி இயக்குனர் மரணம்!

செய்திகள் 13-Jul-2013 1:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சூலம்’, ‘சட்டத்தின் திறப்பு விழா’, ‘பைரவி’, ‘சக்கரவர்த்தி’ உட்பட இருபது திரைப்படங்களுக்கு மேல் தயாரித்து, இயக்கியவரும், ‘பைரவி’ திரைப்படத்தின் முலம் ரஜினிகாந்தை ஹீரோ ஆக்கியவருமானவர் ‘ஆஸ்கர் மூவிஸ்’ எம். பாஸ்கர். இவருக்கு வயது 75. இவர் கடைசியாக தயாரித்த படம் ‘தோட்டா’. சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பாஸ்கர் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் இறந்து விட்டார். அவருடைய இறுதி சடங்கு இன்று சென்னையில் நடக்கிறது. பாஸ்கரை இழந்து வாடும் அவரது குடுமத்தினருக்கு ‘டாப் 10 சினிமா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;