‘மான் கராத்தே’ என்ன கதை தெரியுமா?

‘மான் கராத்தே’ என்ன கதை தெரியுமா?

செய்திகள் 13-Jul-2013 1:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜெமினி’ படத்தில் நடிகர் வையாபுரி ‘ஏக் மார் தோ துக்கடா’ என்பார். பதிலுக்கு நடிகர் தாமு ‘மான் கராத்தே தெரியுமா உனக்கு?’ன்னு கேட்பார். கடைசியில் ஒரு கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் தாமு, ‘‘மான் கராத்தேன்னா இதுதாண்டா’’ எனச் சொல்லிவிட்டு மான்போல் துள்ளிக்குதித்து அந்த இடத்தைவிட்டு ஓடுவார். இந்தக் காமெடியை மையமாக வைத்துதான் சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிக்கும் படத்திற்கு ‘மான் கராத்தே’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

ஒரு இடத்தில் பிரச்சனை என்றவுடன் அந்த இடத்தைவிட்டு உடனே ஓடி ஒழிந்துகொள்வாராம் வேலை வெட்டியில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் சிவகார்த்திகேயன். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் சிவாவிற்கு பணக்காரப் பெண்ணான ஹன்சிகாவைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. அதன்பிறகு ஹன்சிகாவை தன் காதல்வலையில் விழவைப்பதற்காக படாதபாடுபடும் சிவாவின் அவஸ்தைகளை காமெடி, சென்டிமென்ட் கலந்து சொல்லவிருக்கிறார்களாம். ‘‘பணக்காரப் பெண் கேரக்டருக்கு ஹன்சிகாதான் பொருந்தமானவர் என்பதால்தான் இப்படத்திற்கு அவரைத் தேர்வு செய்துள்ளார்கள்’’ என சிவா ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - புதிய டிரைலர்


;