மறைந்தார் ஹிந்தித் திரையுலக ஜாம்பவான்!

மறைந்தார் ஹிந்தித் திரையுலக ஜாம்பவான்!

செய்திகள் 13-Jul-2013 2:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹிந்தித் திரையுலகில் கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம் வில்லன் நடிகராக கொடிகட்டி பறந்தவர் பிரான். திலீப் குமார், தேவ் ஆனந்த், ராஜ் கபூர் போன்ற பாலிவுட்டின் ஜாம்பவான்களுடன் கை கோர்த்து வெள்ளித்திரையில் நடித்து கலக்கி, இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் பிரான். இவர், மத்திய அரசின் ‘பத்மபூஷன் விருது’, ‘தாதா சாகேப் பால்கே விருது’ உட்பட பல விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

93 வயதான பிரான், வயது முதிர்வு காரணமான உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அந்த சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று முமபையில் நடக்கவிருக்கிறது. அவருக்கு ஹிந்தித் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொது மக்கள என எல்லோரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒரு மிகப் பெரும் கலைஞனை இந்தியத் திரையுலகம் இழந்துவிட்டது. இந்த இழப்பு ஈடுகட்ட முடியாதது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டிரைலர்


;