'சுந்தரபாண்டியன்' இயக்குனருக்கு டும் டும் டும்!

‘சுந்தரபாண்டியன்’ இயக்குனருக்கு டும் டும் டும்!

செய்திகள் 13-Jul-2013 11:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்ற வருடம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், தற்போது உதயநிதி ஸ்டாலின் & நயன்தாரா நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் மதுரையைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான செல்வி திவ்யாவிற்கும், நாளை (ஜூலை 14) காலை 10.30  - 12.00 மணி அளவில் மதுரையில் உள்ள வி.கிராண்ட் திருமண ஹாலில் திருமணம் நடக்க இருக்கிறது.

இந்தத் திருமணவிழாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின்,  இயக்குனர்கள் சசிகுமார், அமீர், எஸ்.டி.சபா, சமுத்திரகனி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பரமணியம், எஸ்.ஆர்.கதிர் உட்பட திரையுலகைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் பலரும் பங்குகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;