நடிகர் நந்தாவிற்குத் திருமணம்!

நடிகர் நந்தாவிற்குத் திருமணம்!

செய்திகள் 13-Jul-2013 11:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

2002ல் ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் சூர்யாவின் ஃப்ரண்டாக தமிழ்சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் நந்தா. அதன் பின்பு ‘புன்னகைப் பூவே’, ‘கோடம்பாக்கம்’, ‘ஈரம்’, ‘ஆனந்தபுரத்து வீடு’, ‘வந்தான் வென்றான்’, ‘வேலூர் மாவட்டம்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது இவரும் ஆண்ட்ரியாவும் இணைந்து நடித்த ‘புதிய திருப்பங்கள்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.


27 வயதான நாயகன் நந்தாவிற்கு தற்போது  திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. செல்வி எஸ்.வித்யாரூபா என்பவருக்கும், நந்தாவிற்கும் நாளை கோயம்புத்தூரில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வருகிறது ஜூலை 17ம் தேதி புதன்கிழமை, கோயம்புத்தூர் ‘கொடிசியா’ ‘E’ ஹாலில் வரவேற்பு விழா நடைபெற இருக்கிறது.


இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருக, நந்தா - வித்யாரூபா தம்பதிகளுக்கு அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;