விஜய்யுடன் இணையும் ஆர்யா!

விஜய்யுடன் இணையும் ஆர்யா!

செய்திகள் 11-Jul-2013 3:39 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடித்த குட்டி நட்சத்திரம் சாராவை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து, ஏ.எல்.விஜய் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற செய்தி எல்லோருக்கும் தெரியும். விஜய் நடித்துள்ள ‘தலைவா’ படத்தின் வெளியீட்டு வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும் இயக்குனர் விஜய், ‘தலைவா’ வெளியானதும் சாரா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் சாராவை தவிர வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்று தெரியாமல் சாரா இருந்த நிலையில், ‘’விஜய் இயக்கத்தில் சாரா நடிக்கும் படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நானும் நடிக்க இருக்கிறேன்’’ என்று டுவிட்டரில் தனது பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் ஆர்யா. ஆக, ’மதராசப்பட்டினம்’ படத்திற்கு பிறகு விஜய் இயக்கத்தில் ஆர்யா மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;