மிர்ச்சி மியூசிக் அவார்டு சவுத் 2012

மிர்ச்சி மியூசிக் அவார்டு சவுத் 2012

செய்திகள் 10-Jul-2013 4:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசையில் புதிய திறமையை வெளிப்படுத்தியவர்களை கண்டறிந்து கடந்த நான்கு வருடங்களாக , 'மிர்ச்சி மியூசிக் அவார்டு' என்ற பெயரில் விருது வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது 'ரேடியோ மிர்ச்சி'. இதன் நடுவர் குழு தலைவராக இசையமைப்பாளர் கங்கை அமரன் இருந்து வருகிறார்.

2012க்கான அவார்டு கமிட்டியில் லிங்குசாமி, வசந்த், வெற்றிமாறன், அறிவுமதி, நா.முத்துகுமார், குஷ்பு, சுகன்யா, எஸ்.பி.ஷைலஜா, சுதா ரகுநாதன் மற்றும் செல்வகணேஷ் ஆகியோர் சிறப்பு நடுவர் குழுவில் உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு விருதுக்குரியவர்களை, 600 பாடல்களில் இருந்து தேர்ந்தெடுத்துள்ளனர் இந்த சிறப்பு நடுவர் குழுவினர். வருகிற 26ம் தேதி சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ள விழாவில், 14 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இது சம்பந்தமாக பேசிய கங்கை அமரன், "நிறைய பாடல்கள் வந்தாலும் தரம் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே இருப்பதாக கூறினார். மேலும் இவ்விழாவை பெரிய அளவில் நடத்த வேண்டும் எனவும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா போன்றவர்கள் அழைக்கபட வேண்டும். ஒவ்வொரு பாடலையும் திரும்பத் திரும்ப பலமுறை கேட்டு, விருதுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் நடுவர் வெற்றிமாறன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்றார்.

முன்னதாக கங்கைஅமரன் குஷ்புவின் அழகை பாராட்டும் வகையில், ‘‘ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாரு... என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு..’’ என்று அவர் எழுதிய பாடலை பாடி வெட்கபட வைத்தார்.

எஸ்.பி ஷைலஜா பேசும்போது, ‘‘அற்புதமான 600க்கும் மேற்பட்ட பாடல்களைக் கேட்டு தேர்ந்தெடுத்துள்ளோம். கிட்டத்தட்ட ஒரு ஸ்வீட் டார்ச்சரை அனுபவிக்க வேண்டியிருந்தது. மேலும் இந்த ஆண்டு வாக்களிக்கும் முறையை கொண்டு வந்தது இந்த விருதினை மேலும் சிறக்க செய்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெள்ளை கனவு வீடியோ பாடல் - புரியாத புதிர்


;