பேரரசு இயக்கும் 'திகார்'

 பேரரசு இயக்கும்  'திகார்'

செய்திகள் 10-Jul-2013 11:11 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘திருப்பதி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பேரரசு, அடுத்ததாக நவீன தொழில்நுட்பத்துடன் இயக்கி வரும் படம் ‘திகார்’. இப்படத்தை ‘காட்சன் ஃபிலிம்ஸ்’ பட நிறுவனம் தயாரிக்க -  கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் பேரரசு. படம் பற்றி  பேரரசு கூறும்போது.
“ஒரு காலத்தில்  நாட்டையே கலக்கிக் கொண்டிருந்த மிகப் பெரிய தாதா அலெக்ஸண்டர். அவரின் மறைவுக்குப் பிறகு  மகன் ஜோர்தன், இன்றைய சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விறுவிறுப்பாக சொல்லும் படம் தான் ‘திகார்’. இது சாதாரண ஆக்ஷன் படமல்ல, அதிரடி ஆக்ஷன் படம். ஃபிலிம் சிட்டியில் 25 லட்ச ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு முகுந்தன் – ரியாஸ்கான் மோதும் பாக்சிங் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கதைக்களத்துக்கேற்ப துபாய், மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெற்றுள்ளது. இது வழக்கமான என் பாணி படமாக இருக்காது” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஜய் மில்டனின் ஆதங்கம்


;