தனுஷ் நடிக்க மறுத்த படத்தில் சிம்பு!

தனுஷ் நடிக்க மறுத்த படத்தில் சிம்பு!

செய்திகள் 10-Jul-2013 11:02 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பசங்க’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தொடர்ந்து 'மெரினா’, ’வம்சம்’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பாண்டிராஜ், அடுத்து தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் தொடர்ந்து தனுஷ் பல படங்களில் கமிட் ஆகியிருப்பதால், பாண்டிராஜுக்கு அவரது கால்ஷீட் கிடைக்காத நிலையில், தனுஷுக்காக தயார் செய்து வைத்திருந்த கதையை சிம்புவிடம் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். அந்த கதை சிம்புவுக்கு ரொமபவும் பிடித்துபோக, அதை தானே தயாரித்து ஹீரோவாக நடிக்க போகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு முதன் முதலாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு விசேஷம், இந்த படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைத்து இசை அமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;