‘சாய் பாபா’வாகும் திலீப்!

‘சாய் பாபா’வாகும் திலீப்!

செய்திகள் 9-Jul-2013 12:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

புட்டபர்த்தி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு ‘சாய் பாபா’ என்ற பெயரில் திரைப்படமாகிறது. தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த படத்தை தெலுங்கின் பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கும் இப்படத்தில் சாய் பாபா வேடத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு கிடைத்திருக்கிறது.

சாய்பாபாவின் வேடத்தில் நடிக்க ஏராளமான தென்னிந்திய நடிகர்களை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் பரிசீலித்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா, கடைசியில் திலீப் தான் அந்த கேரக்டருக்கு மிக பொருத்தமானவர் என்று அவரை தேர்வு செய்திருக்கிறார்.

தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் வெளியாக இருக்கும் இப்படத்தில் நடிப்பதற்காக திலீபுக்கு பெரிய சம்பளம் (இதுவரை எந்த மலையாள நடிகரும் வாங்காத) பேசப்பட்டிருக்கிறதாம். இந்த படத்தில் கோடி ராமகிருஷ்ணாவுடன் திரையுலகின் பல ஜாம்பவான்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.

சாய் பாபாவின் 20 வயது முதல் அவர் சமாதி அடையும் வரையிலான நிகழ்வுகளை சித்தரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு புட்டபர்த்தி மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் நடக்கவிருக்கிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்தில் நடிப்பதற்காக திலீப் விரதம் இருக்க போகிறாராம்.

ஏற்கெனவே ஷிர்டி சத்யசாய் பாபாவின் வரலாறை சித்தரித்து எடுக்கப்பட்டிருந்த ‘ஷிர்டி சாய்’ என்ற தெலுங்குப் படத்தில் நாகார்ஜுனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத்து.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹலோ - டிரைலர்


;