காலமானார் ராசு மதுரவன்!

காலமானார் ராசு மதுரவன்!

செய்திகள் 9-Jul-2013 12:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ராசு மதுரவன். ‘பூமகள் ஊர்வலம்’ ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’ போன்ற பல குடும்ப பாங்கான, கிராமத்து உறவுகளை அருமையாக சித்தரித்து படங்களை இயக்கி வந்தவர் சமீபத்தில் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அந்த சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் காலமானார்.

44 வயதான ராசுமதுரவன் கடைசியாக இயக்கிய படம் ‘சொகுசு பேருந்து’. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்னாடியே இந்த உலகிலிருந்து அவரை ஆண்டவன் அழைத்துக்கொண்டார். ராசுமதுரவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ’டாப் 10 சினிமா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;