ஜோதிகா நான்கு முறை பார்த்த படம்!

ஜோதிகா நான்கு முறை பார்த்த படம்!

செய்திகள் 9-Jul-2013 11:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்திருக்கும் ‘சிங்கம் 2’ படத்தின் அதிரடி வெற்றியை, நேற்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சூர்யா, ஹரி உட்பட படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் பத்திரிகையாளர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா...

‘‘நானும் ஹரியும் நான்கு படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். ஒவ்வொரு முறையும் என்னுடைய படம் எல்லா சென்டர் ஆடியன்ஸுக்கும் போய்ச் சேரணும்னு நினைப்பேன். இந்தப் படம் அந்த வகையில் எனக்கு ரொம்ப திருப்தியா அமைஞ்சிருக்கு. படத்தைப் பார்த்துட்டு, ‘உன்னை நெனைச்சா ரொம்ப பெருமையா இருக்கு’ன்னு அப்பா மெசேஜ் அனுப்பினார். அதேமாதிரி ஜோவும் இந்தப் படத்தை 4 தடவை பார்த்துட்டாங்க. முதல்முறையா என்னோட நடிப்பைப் பார்த்து அவங்க கைதட்டி ரசிச்சாங்க. இந்த வெற்றிக்குக் காரணம் எங்களோட டீம் ஒர்க்தான்!’’ என்று நெகிழ்ந்து பேசினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;