ஸ்ரீப்ரியாவின் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’!

ஸ்ரீப்ரியாவின் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’!

செய்திகள் 9-Jul-2013 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாள படங்கள் தமிழில் ரீ-மேக்காகும் சீசன் இது. அந்த வரிசையில் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘22 ஃபீமெல் கோட்டயம்’ படமும் தமிழில ரீ-மேக் ஆகிறது. ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்ற பெயரில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை பிரபல நடிகையும் ஏராளமான டிவி தொடர்களை இயக்கியவருமான ஸ்ரீப்ரியா இயக்குகிறார். ஏற்கெனவே தமிழில் ‘சாந்தி முகூர்த்தம்’, ‘நானே வருவேன்’ போன்ற படங்களையும், கன்னடத்தில் இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார் இவர். தற்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா.

‘22 ஃபீமெல் கோட்டயம்’ படத்தை ஆஷிக் அபு இயக்க, ஃபஹத் ஃபாசில், ரீமா கல்லிங்கல் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் ரீமா கல்லிங்கல் மலையாளத்தில் நடித்த வேடத்தில் தமிழில் நடிக்கவிருப்பவர் நித்யாமேனன். தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படத்தை வெளியிடும் திட்டமிருப்பதால்தான், இரண்டு மொழிகளிலும் தெரிந்த முகமான நித்யாமேனனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

இப்படத்தை தனது கணவர் ராஜ்குமாருடன் இணைந்து தயாரிக்கிறார் ஸ்ரீப்ரியா. இந்தப் படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;