‘பீட்சா 2’ நாயகனின் அடுத்த படம்!

‘பீட்சா 2’ நாயகனின் அடுத்த படம்!

செய்திகள் 9-Jul-2013 10:26 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சூது கவ்வும்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து கொண்டு, ஆள் கடத்தலில் ஈடுபடுபவராக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் அஷோக் செல்வன். இவர் தற்போது, ‘பீட்சா’ படத்தின் இரண்டாம் பாகமான ‘வில்லா’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து, திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்திலும் இவரையே நாயகனாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

‘அவன் இவன்’ புகழ் ஜனனி ஐயர், அஷோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ‘தெகிடி’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு வகையான சூதாட்ட விளையாட்டத்தைதான் ‘தெகிடி’ என அழைப்பார்களாம். ‘நாளைய இயக்குனர் சீசன் 2’வின் டைட்டில் வின்னரான பி.ரமேஷ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

‘பீட்சா’ போன்றே க்ரைம் த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவைக் கவனிக்க, இசையமைக்கவிருக்கிறார் நிவாஸ். ‘வில்லா’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணி துரிதமாக நடந்து கொண்டிருப்பதால், எல்லாம் முடிந்தபிறகு இந்த ‘தெகிடி’யின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;