ஜெய் எனக்கு உதவினார் - நஸ்ரியா நஸீம்

ஜெய் எனக்கு உதவினார் - நஸ்ரியா நஸீம்

செய்திகள் 9-Jul-2013 10:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆரம்பமே நல்ல ‘நேரமா’க அமைய, தமிழ் ரசிகர்களின் மொத்த இதயங்களையும் கொள்ளையடித்துக் குடிபுகுந்தவர் கேரள புதுவரவு நஸ்ரியா நசீம். தற்போது, ஜெய்யுடன் அய்யங்காராத்துப் பெண்ணாக ‘திருமணம் எனும் நிக்காஹ்’, அட்லீ இயக்கத்தில் ஆர்யாவின் முன்னாள் காதலியாக ‘ராஜா ராணி’, சற்குணம் இயக்கத்தில் தனுஷுடன் பல் மருத்துவராக ‘நையாண்டி’ ஆகிய படங்களில் பம்பரமாக சுழன்று நடித்து வருகிறார். தன்னுடன் நடிக்கும் நாயகர்களைப் பற்றி மனம் திறந்த நஸ்ரியா,

‘‘ஜெய்கூடதான் எனக்கு ஃபர்ஸ்ட் தமிழ் படமே. அது ஒரு மறக்க முடியாத அனுபவம். ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படக்குழு மூலமாதான் கொஞ்சம் கொஞ்சம் நான் தமிழ் நல்லா பேசக் கத்துக்கிட்டேன்னு சொல்லலாம். முக்கியமா ஜெய் எனக்கு ரொம்ப உதவியா இருந்தார். அதேமாதிரி ஆர்யா ஒரு இடத்தில இருந்தார்னா போதும், அந்த இடமே ‘கலகல’வென ஆயிடும். அப்படி ஒரு ஜாலிப் பேர்வழி அவர். ஷாட்டுக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் அவரோட ஒரே அரட்டைதான்.

தனுஷ் பற்றி சொல்லவே வேணாம். எக்ஸலன்ட் ஆக்டர். இவ்வளவு சீக்கிரத்துல அவர் மாதிரி ஒருத்தர்கூட ஒர்க் பண்ற சான்ஸ் கிடைச்சதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும். அவர்கூட நடிக்கிறவங்களுக்கு அவருக்கு ஈக்குவலான ஸ்பேஸ் கண்டிப்பா கிடைக்கும்.’’ என தன் நாயகர்களைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் நஸ்ஸு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;