எந்த படம் எப்போது வரும்?

எந்த படம் எப்போது வரும்?

செய்திகள் 8-Jul-2013 12:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சிங்கம் 2’ படத்தின் அதிரடி வெற்றியால் அடுத்து வெளியாக இருந்த ஒரு சில படங்களின் ரிலீஸில் மாற்றம் உருவாகியிருக்கிறது. அதில் முக்கியமான படம், விஷால் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கியிருக்கும் ‘பட்டத்து யானை’. ‘சிங்கம் 2’ ஜூலை 5ஆம் தேதி ரிலீஸ் தேதியை அறிவித்திருந்த நிலையில், ஜூலை 12ஆம் தேதி ‘பட்டத்து யானை’ ரிலீஸ் என்று விளம்பரங்கள் வெளியாகியிருந்தது.

ஆனால், தற்போது ‘பட்டத்து யானை’க்கு ஜூலை 12ஆம் தேதிக்கு தியேட்டரில் ஷோ கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் இந்தப் படம் சம்பந்தமாக தற்போது வரும் விளம்பரங்களில் ரிலீஸ் தேதியை குறிப்பிடாமல் ‘விரைவில்’ என்ற அறிவிப்போடு வருகிறது. இதனால் ‘பட்டத்து யானை’யின் ரிலீஸ் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தனுஷ் நடிப்பில், பரத்பாலா இயக்கியிருக்கும் ‘மரியான்’ ஜூலை 19ஆம் தேதி ரிலீஸ் என்று தினமும் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே தனுஷ் நடித்த, ‘அம்பிகாபதி’யால் தள்ளிப்போன ‘மரியான்’ இப்போது திட்டமிட்டுள்ள படி வருகிற 19-ஆம் தேதி ரிலீஸாகும் என்று தெரிகிறது.

இந்தப் படங்களை தொடர்ந்து இந்த மாத ரிலீஸாக களத்தில் இருக்கிற இன்னொரு படம் ‘கற்றது தமிழ்’ படப் புகழ் ராம் இயக்கி, நடித்திருக்கும் ‘தங்க மீன்கள்’. இப்படம் ஜூலை 26-ஆம் தேதி ரிலீஸ் என்று விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த படங்கள் அறிவித்திருக்கிற படி ரிலீஸாகுமா என்பது ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.

எது எப்படியோ, பெரிய பெரிய படங்களின் வெளியீட்டே தள்ளிப் போகும் நிலையில் ரிலீசுக்கா காத்திருக்கும் சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதுதான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;