ஹ்ருத்திக் ரோஷனுக்கு என்ன ஆச்சு?

 ஹ்ருத்திக் ரோஷனுக்கு என்ன ஆச்சு?

செய்திகள் 8-Jul-2013 10:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அக்னிபாத்’தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஹ்ருத்திக் ரோஷன் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் ‘க்ரிஷ் 3’ படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி வெளியீடாக ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில், அவர் தற்போது ‘பேங் பேங்’ படத்தில் நடத்திக் கொண்டிருக்கும்போது பயங்கர தலைவலிக்கு ஆளானார்.

சாதாரண தலைவலிபோல் அல்லாமல் மிகவும் அதிகமாக இருந்ததால், ஸ்கேன் செய்து பார்த்தார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு சண்டைக்காட்சியின்போது தலையில் ஏற்பட்ட அடியை சாதாரணமாக விட்டதன் விளைவாக மூளையின் ஓரிடத்தில் ரத்தம் கட்டியிருப்பது அப்போது தெரியவந்தது.

இதனால் வெளிநாட்டில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, நேற்று மும்பை மருத்துவமனை ஒன்றில் ஹ்ருத்திக் ரோஷனுக்கு மூளை அறுவை சிகிச்சை மூலம் ரத்த அடைப்புகள் நீக்கப்பட்டு புதிய ரத்தம் ஏற்பட்டுள்ளது. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தநிலையில், இன்னும் இரண்டு நாட்களிலிருந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி, மூன்று வாரங்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க இருக்கிறாராம். இதன் பிறகு தனது வழக்கமான படப்பிடிப்பு வேலைகளில் கலந்துகொள்வாராம் ஹ்ருத்திக்.

சீக்கிரம் வாங்க சூப்பர் ஹீரோ!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேங் பேங் - டிரைலர்


;