அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா?

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா?

செய்திகள் 8-Jul-2013 11:04 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘துப்பாக்கி’யின் அசுர வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பில் இருக்கும் படம் விஜய்யின் ‘தலைவா’. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், பட வெளியீட்டு வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறது ‘தலைவா’ படக் குழு. இந்நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் ‘வேந்தர் மூவிஸ்’ டி.சிவா இப்படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘‘படத்துக்கு படம் விஜய்யின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துக் கொண்டிருக்க அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ‘தலைவா’ படம் பெரிய விலைக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. படம் அடுத்த மாதம் ரமலான் பண்டிகையன்று ரிலீஸாக இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;