நாளை முதல் குக்கூ…

நாளை முதல் குக்கூ…

செய்திகள் 6-Jul-2013 5:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ராஜு முருகன். இவர் இப்போது இயக்குனராக புரொமோஷன் பெற்று, ‘குக்கூ’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இது வரை ஏ.ஆர். முருகதாஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் படங்களை தயாரித்து வந்த ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ‘குக்கூ’ படத்தின் மூலம் நேரடியாக தயாரிப்பு களத்தில் இறங்குகிறது. இந்த படத்தில் ‘அட்டக்கத்தி’ புகழ் தினேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மாளவிகா நாயர் நடிக்கிறார்.

இவர் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மலையாள ரீ-மேக்கான ‘பிளாக் பட்டர்ஃப்ளைஸ்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவராவார். ‘குக்கூ’ படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்க, பிரேம்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை நாளை (ஜூலை 7) சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதனை தொடர்ந்து திங்கட் கிழமை முதல் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டீஸர்


;