வசனங்களும் இசையும் இல்லாத படம்!

வசனங்களும் இசையும் இல்லாத படம்!

செய்திகள் 6-Jul-2013 3:41 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாடல்கள் இல்லாத, சண்டை காட்சிகள் இல்லாத படங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் இசையும், வசனங்களும் இல்லாத படத்தை பார்த்திருக்கிறீர்களா? அனேகமாக, இல்லை என்ற பதில்தான் வரும். ஆனால் விரைவில் அது மாதிரியான ஒரு படத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்! அந்த படத்தின் பெயர் ‘கோ டாக் – லைஃப் சரவுண்ட்ஸ் இன் 360’.

இந்த புதிய முயற்சியில் இறங்கியிருப்பவர் சாஜன் குரியன். இவர் ஏற்கெனவே ‘தி லாஸ்ட் விஷன்’, ‘டான்சிங் டெத்’ போன்ற மலையாள படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கோ டாக்’ 73 நிமிடங்கள் மட்டும் ஓடக்கூடிய சைக்கோ த்ரில்லர் கதையாம். இந்த படத்தில் அருண் ராம் கிருஷ்ணா, ஷாஜு உம்மர், மது லிஜோ ஆகியோர் நடிக்க, படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. ‘’இது உலக சினிமாவிலேயே புதிய முயற்சி’’ என்கிறார் இந்த படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கும் சாஜன் குரியன்.

படம் எப்ப வரும் பாஸ்? அதை சொல்லவே இல்லையே…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;