உலகம் முழுக்க சிங்கத்தின் அதிரடி பாய்ச்சல்…

உலகம் முழுக்க சிங்கத்தின் அதிரடி பாய்ச்சல்…

செய்திகள் 5-Jul-2013 3:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்று உலகம் முழுக்க வெளியாகி ரசிகர்களிடத்தில் மாபெரும் வரவேற்பை பெற்று தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘சிங்கம் 2’. கேரளாவில், திருவனந்தபுரம் சிட்டியின் மத்தியில் இருக்கும் ஸ்ரீகுமார் திரையரங்கில் வெளியாகியுள்ள சிங்கம், காலை காட்சியாக 5 மணிக்கு திரையிட, அங்கு திரண்ட கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தால் ட்ராஃபிக் ஜாம் ஏற்பட்டு, போக்குவரத்து தடைப்பட்டதால் காவல் துறையினர் விரைந்து வந்து கூட்டத்தினரை கட்டுப்படுத்தியிருக்கின்றனர்.

இதுபோன்று படம் வெளியாகியிருக்கும் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் உட்பட மலேசியா, துபாய், அமெரிக்கா என எல்லா இடங்களிலும் சிங்கம் அதிரடியாக பாய்ந்து வசூலில் வேட்டை செய்து வருகிறதாம். படம் பார்த்தவர்கள் ‘‘சிங்கம் 2’ இந்த வருடத்தின் மாபெரும் மெகா ஹிட் படமாக அமைய போகிறது’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;