சபாஷ், சரியான போட்டி!

சபாஷ், சரியான போட்டி!

செய்திகள் 5-Jul-2013 1:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரே நாளில் தந்தை நடித்த படமும், மகன் நடித்த படமும் வெளியாகி நேருக்கு நேர் மோத இருக்கிறது. என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த மோதல் நடைபெறவிருப்பது மலையாள திரைப்பட உலகில்! பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், மம்முட்டி நடித்திருக்கும் படம் ‘கடல் கடந்நொரு மாத்துக் குட்டி’.

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து, சமீர் தாஹா இயக்கியிருக்கும் படம் ’நீலாகாசம், பச்ச கடல், சுவன்ன பூமி’ இந்த இரண்டு படங்களையும் இதன் தயாரிப்பாளர்கள் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட, இந்த விஷயம் மல்லுவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

இந்நிலையில் சூர்யாவின் ‘சிங்கம் 2’ ரிலீஸாகி வசூலில் தூள் கிளப்பிக் கொண்டிருக்க, அடுத்து தனுஷின் ‘மரியான்’, விஜய்யின் ‘தலைவா’, ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ போன்ற அந்நிய மொழி பிரம்மாண்ட படங்களும் களத்தில் குதிக்க இருக்கும் நிலையில் எந்த படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என்று தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். எது எப்படியோ மம்முட்டி – துல்கர் சல்மான் நடித்த படங்கள் ஒரே தினம் வெளியாகி கொம்பு கோர்க்க இருப்பதைதான் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;