மோகன்லாலின் லூசிஃபர்!

மோகன்லாலின் லூசிஃபர்!

செய்திகள் 4-Jul-2013 1:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போது ‘ஜில்லா’ படத்தில் பிசியாக இருக்கும் மோகன்லால் அடுத்து ‘லூசிஃபர்’ என்ற ஒரு மலையாள படத்தில் நடிக்கவிருக்கிறார். ;ஆசிர்வாத் சினிமா’ என்ற பேனரில் ஆன்டணி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படத்தினை ராஜேஷ் பிள்ளை இயக்க இருக்கிறார். ‘ஈ அடுத்த காலத்து’, ’லெஃப்ட் ரைட் லெஃப்ட்’ போன்ற பல படங்களுக்கு திரைக்கதை எழுதிய முரளி கோபி இப்படத்தின் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

இந்த படம் குறித்து, இயக்குனர் ராஜேஷ் பிள்ளை, ‘’இந்த படத்தில் புதிய ஒரு அவதாரத்தில் மோகன்லாலை பார்க்க இருக்கிறீர்கள், இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ஒரு அனுபவத்தை கொடுக்கும்’’ என்று கூறியிருக்கிறார். தற்போது, மோகன்லாலுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வர, அடுத்த ஆண்டுதான் படம் வெளியாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;