நாளை முதல் சிங்கத்தின் கர்ஜனை!

நாளை முதல் சிங்கத்தின் கர்ஜனை!

செய்திகள் 4-Jul-2013 11:13 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூர்யா, ஹரி கூட்டணியில் உருவாகி, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில இருக்கும் ‘சிங்கம் 2’ படம் நாளை உலகம் முழுக்க வெளியாகிறது. சூர்யா நடித்த படங்களிலேயே மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் நாளை சென்னையிலுள்ள பல தியேட்டர்களில் ஸ்பெஷலாக காலை காட்சியாக திரையிட இருக்கிறார்கள்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் வெளியாகும் இப்படம், ஹிந்தியில் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை அமெரிக்காவில் ’அட்மஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் 62 தியேட்டர்களில் வெளியிட இருக்கிறது. இதற்கு முன் அஜித் நடித்த ‘பில்லா 2’ படம் தான் அமெரிக்காவில் ஒரே நேரத்தில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி சாதனை படைத்திருந்தது.

இப்போது அந்த சாதனையை சூர்யாவின் ‘சிங்கம் 2’ முறியடித்துள்ளது. இந்த செய்தியை ‘அட்மஸ்’ நிறுவனத்தின் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோலிவுட் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க ‘சிங்கம் 2’ வை கொண்டாட காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;