சிறந்த விளம்பரங்களுக்கு விருதுகள்!

சிறந்த விளம்பரங்களுக்கு   விருதுகள்!

செய்திகள் 4-Jul-2013 10:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தொலைக்காட்சிகளில் ஒரு சில நிகழ்ச்சிகளின் நடுவே மிக சுவாரஸ்யமாகத் திகழ்வது விளம்பரங்களே. பார்வையாளர்கள் வேறு சேனல்களுக்கு செல்ல விடாத அளவுக்கு விளம்பரங்களை சுவாரஸ்யமாகத் தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி வரும் விளம்பரங்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து Thomas Edison Advertisement Award என்ற பெயரில் விருதினை வழங்குகிறது.

வெளிநாடுகளில் சிறந்த விளம்பரங்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழில் இதுவே முதல் முறையாகும். சிறந்த தொலைக்காட்சி மற்றும் ஊடக விளம்பரங்களுக்கான விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் நடக்கவிருக்கிறது.

இது சம்பந்தமான செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவுக்கான மலேசிய தூதர் சித்ரா தேவி ராமையா, நடிகைகள் வரலட்சுமி, ‘காதல்’ சரண்யா, அர்ச்சனா, நடிகர் வின்சென்ட் அசோகன் ஆகியோர் பங்கேற்று இதற்கான லோகோவை அறிமுகப்படுத்தினர். விளம்பரங்களைத் தேர்வு செய்வதற்கான ஆன்லைன் வாக்களிப்பை நடிகர் வின்சென்ட் அசோகன் தொடங்கி வைத்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்யா - யவனா வீடியோ சாங்


;