அஞ்சலி ஆஜராவாரா?

அஞ்சலி ஆஜராவாரா?

செய்திகள் 3-Jul-2013 4:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

திரைப்பட இயக்குனர் களஞ்சியத்துடன் சேர்ந்து தனது சித்தி பாரதி தேவி, தன்னை கொடுமைப்படுத்தி வருவதாக சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்திருந்தார் நடிகை அஞ்சலி. இந்த பிரச்சனை விஸ்வரூபமெடுத்து, பாரதி தேவி போலீசில் புகார் செய்ய, அஞ்சலி தலை மறைவானார். இதை தொடர்ந்து வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு, ஹைதராபாத் காவல் துறை இணை ஆணையர் முன்னிலையில் ஆஜரானார் அஞ்சலி.

இத்துடன் அஞ்சலியின் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த கோரி பாரதி தேவி தொடர்ந்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அஞ்சலியை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாரதி தேவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டர். ஆனால் அஞ்சலியை இன்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவில்லை. அத்துடன் அஞ்சலி பாதுகாப்பாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அஞ்சலிக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதி, அடுத்த வழக்கு விசாரணையின்போது அஞ்சலி நீதி மன்றத்தில் ஆஜராகாத பட்சம் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து வருகிற 9—ஆம் தேதி அஞ்சலியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

வருகிற 9—அம் தேதி நடிகை அஞ்சலி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேரன்பு டீஸர்


;