’அவதார்’ ஸ்டைலில் இரண்டாம் உலகம்!

’அவதார்’ ஸ்டைலில் இரண்டாம் உலகம்!

செய்திகள் 3-Jul-2013 2:39 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மாறுபட்ட கதை களத்துடன் படங்களை இயக்கி வரும் செல்வராகவன், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தைத் தொடர்ந்து இயக்கி வரும் படம் ‘இரண்டாம் உலகம்’. இந்த படத்தில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்து வர, படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் காட்சிகளை மோஷன் கேப்ச்சர் டெக்னாலஜி பயன்படுத்தி எடுத்து வருகிறாராம் செல்வராகவன்.

‘அவதார்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட இந்த டெக்னாலஜி, தமிழில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த ‘மாற்றான்’ படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தை ‘பிவிபி சினிமா’ நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை விரைவில் வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

‘படம் எப்போது திரைக்கு வரும்?’ என்பதை மட்டும் கேட்டு விடாதீர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;