5 விதமாக நடிக்கும் நடிகர்!

5 விதமாக நடிக்கும் நடிகர்!

செய்திகள் 3-Jul-2013 1:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

200க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சலீம் குமார். 2011ல் இவர் நடித்த ‘ஆதமின்டே மகன் அபு’ மலையாளப் படத்திற்காக கேரள அரசின் மாநில விருதையும், தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். இவர் தற்போது தமிழில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்திருக்கும் ‘நெடுஞ்சாலை’ திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

சலீம் குமாருடன், ‘நெடுஞ்சாலை’ படத்தில் பணிபுரிந்த அனுபத்தைப் பற்றி இயக்குனர் கிருஷ்ணா கூறும்போது, ‘‘என்ன காட்சி என்பதை சலீம் குமாரிடம் சொல்லிட்டால் போதும். அவர் அந்தக் காட்சிக்கேற்ப 5 விதமான மாடுலேஷன்களில் நடித்துக் காண்பித்து, எது சரியாக இருக்கிறது என்று கேட்பார். எப்படி இவரால் ஒரு சீனுக்காக இத்தனை விதங்களில் நடிக்க முடிகிறது என எனக்கு பிரமிப்பாக இருக்கும். உண்மையில் அவரிடம் பணிபுரிந்ததற்காக நான் ரொம்பவும் பெருமைப்படுகிறேன்’’ என சலீம்குமாரைப் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;