புற்றுநோய் பாதிக்கப்பட்ட இயக்குனர்!

புற்றுநோய் பாதிக்கப்பட்ட இயக்குனர்!

செய்திகள் 3-Jul-2013 12:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ராசு மதுரவன். மறைந்த மணிவண்ணன் கூட பணியாற்றி அனுபவம் பெற்ற இவர், முதன் முதலாக இயக்கிய படம் ‘பூமகள் ஊர்வலம்’. இந்த படத்தைத் தொடர்ந்து, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’ போன்ற பல குடும்ப பாங்கான, கிராமத்து உறவுகளை அருமையாக சித்தரித்து படங்களை இயக்கினார்.

இவர் இப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது நாக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் புற்றுநோய் பரவியிருப்பதை கண்டு பிடித்த மருத்துவர்கள், இதற்கு காரணம் அதிகபடியான புகை பழக்கமும், பாக்கு போடும் பழக்கமும்தான் என்று கூறியிருக்கிறார்கள்.

மக்கள் நன்கறிந்த ஒரு கலைஞன் இப்படடி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது, இந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமையான ஒவ்வொருவரும் ஒரு எச்சரிக்கையாக எடுத்து அந்த பழக்கத்திலிருந்து விடுப்பட வேண்டும்,

இயக்குனர் ராசுமதுரவன், சீக்கிரம் குணம் அடைந்து தொடர்ந்து கலை சேவை செய்ய வேண்டும் என்பதே ‘டாப் 10 சினிமா’வின் விருப்பமாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;